ETV Bharat / bharat

முன்னாள் சிறப்பு நீதிபதி பாதுகாப்புக் கோரி மனு - தள்ளுபடி செய்த நீதிமன்றம் - டெல்லி செய்திகள்

டெல்லி : பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பை அறிவித்த முன்னாள் சிறப்பு நீதிபதி எஸ்.கே. யாதவின் பாதுகாப்பை நீட்டிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் சிறப்பு நீதிபதி பாதுகாப்புக் கோரி மனு - தள்ளுபடி செய்த நீதிமன்றம் !

author img

By

Published : Nov 2, 2020, 5:04 PM IST

1992ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. 28 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நடத்திவந்தது.

இந்த மாத தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு கடந்த செப்.30ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக மூத்தத் தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராம ஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் நிர்தியா கோபால் தாஸ், உமா பாரதி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேருக்கு எதிராகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தரப்பு உறுதியான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி அவர்களை விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பை வழங்கிய லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ், தன்னுடைய பாதுகாப்பை உறுதிசெய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், "சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பை என்னுடைய பதவியின் கடைசி நாளில் வழங்கி உள்ளேன். சிக்கலுக்குரிய இந்த வழக்கின் உணர்திறனைக் கருத்தில்கொண்டு எனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றம் முன்வர வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் தலைமையில் நவீன் சின்ஹா, கிருஷ்ணா முராரி ஆகியோரை உள்ளடக்கிய அமர்வின் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், "மனுதாரருக்கு தொடர்ந்து பாதுகாப்பை வழங்குவது பொருத்தமானதாக நாங்கள் கருதவில்லை" எனக் கூறி அதனைத் தள்ளுபடி செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.