கரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடுமுழுவதும் வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன.
இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதற்காக 'PM Cares' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதி இருக்கும் போது புதிதாக ஏன் அறக்கட்டளை ஆரம்பிக்க வேண்டும் என்றும், 'PM Cares' அறக்கட்டளையை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஷான்ஸ்வாட் ஆனந்த் என்ற வழக்கறிஞர் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது.
இதையும் படிங்க : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்