ETV Bharat / bharat

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி  பிஎஸ்-ஐவி வாகனங்கள் விற்பனை.. - பிரமாணப் பத்திர

டெல்லி:  உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மார்ச் 31ஆம் தேதி காலக்கெடுவுக்கு பிறகு பிஎஸ்-ஐவி வாகனங்களை விற்பனை செய்த ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு (ஃபாடா) உள்ளிட்ட ஆட்டோமொபைல் சங்கங்களுக்கு  உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

sc-pulls-up-automobile-associations-for-flouting-orders-on-bs-iv-vehicles

author img

By

Published : Jun 16, 2020, 2:24 AM IST

இதுதொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதி மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்விற்ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பிஎஸ்-ஐவி ரக வாகனங்கள் விற்பனை செய்தது தொடர்பாக மே மாத இறுதிக்குள் ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தங்களது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும், ஆனால் ஜூன் மாதம் முடியும் தருணத்தில்கூட இன்னும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உங்களுக்கு விளையாட்டாக தெரிகிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், 1.05 லட்சம் பிஎஸ்-ஐவி வாகனங்களை விற்பனை செய்ய அனுமதித்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, 2.55 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கடுமையாக சாடினர்.

இதனையடுத்து, மார்ச் 27ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, மேற்கொள்ளப்பட்ட பிஎஸ்-ஐவி வாகனங்கள் விற்பனை மற்றும் பதிவு குறித்த அனைத்து விவரங்களையும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்துக்கும், ஆட்டோ மொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்புக்கும் உத்தரவிட்ட நீதிமன்றம், இதுதொடர்பான முழு விவரங்கள் சமர்பிக்கப்பட்ட பிறகே மீண்டும் விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.