கடந்த ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், அரசு கட்டடங்களில் ஆளும் கட்சியின் நிறங்களே பூசப்படுவதாக குற்றச்சாடுகள் எழுந்தன.
இது குறித்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், கட்சி சார்பான வண்ணங்களை அரசு கட்டடங்களிலிருந்து நீக்கவும், இது குறித்து மாநில அரசு வெளியிட்டிருந்த அரசாணையை (623) ரத்து செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மாநில அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், பஞ்சாயத்து கட்டடங்களிலிருந்து நீலம், பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்களை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தெலங்கான தலைமைச் செயலர் நிலம் சாஹ்னி, மாநில பஞ்சாயத்து ராஜ் கமிஷனர் கிரிஜா சங்கர் ஆகியோர் நீதிமன்றத்தின் முன் ஆஜராகினர்.
இருப்பினும், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசு கட்டடங்கள் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் சொந்தமானது அல்ல என்றும் மாநிலத்திலுள்ள அரசு கட்டடங்களில் இருக்கும் கட்சி சார்பான நிறங்களை நான்கு வாரங்களில் அகற்ற வேண்டும் என்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரபலமான முதலமைச்சர்கள் பட்டியல் : முதலிடம் பிடித்த நவீன் பட்நாயக்