ETV Bharat / bharat

11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு - சபாநாயகர் பிப்ரவரி 14ஆம் தேதி பதிலளிக்க உத்தரவு! - SC on MLA disqualification case

டெல்லி: தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சபாநாயகர் பிப்ரவரி 14ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

SC order on TN MLA disqualification case
SC order on TN MLA disqualification case
author img

By

Published : Feb 4, 2020, 2:47 PM IST

பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முன் இன்று வந்தது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அதேபோல், 11 எம்.ஏல்.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான திமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், "11 அதிமுக எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு அளிக்கப்பட்ட கடித்தத்துக்கு அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. அதன்மீது அவர் முடிவு எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று வாதிட்டார்.

மேலும், இது தொடர்பாக சபாநாயகரிடம் 20.3.2017இல் மனு அளிக்கப்பட்டது என்ற கபில் சிபல், பல நேரங்களில் அரசுக்கு எதிராக அளிக்கப்படும் மனுக்களை சபாநாயகர் உடனே பரிசீலனை செய்வதில்லை என்றும் ஆனால், மனு எதிர்க்கட்சிகளுக்கு எதிரானது என்றால் மறுநாளே அதன்மீது நடவடிக்கை எடுக்கின்றனர் என்றும் கூறினார்.

"அட்டவணை 10இன்படி சபாநாயகர் என்பவர், உடனே மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்படும் தீர்மானங்கள், கோரிக்கைகள் மீது மூன்று மாதங்களுக்கு மேலாக கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் அதிகமான காலம். இது தொடர்பாக மணிப்பூர் மாநில சபாநாயகருக்கு நீதியரசர் நாரிமன் அண்மையில் வழங்கிய உத்தரவினை கவனத்தில் கொள்ளவேண்டும்," என்று கபில் சிபல் வாதிட்டார்.

ஆனால், பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகியோ கபில் சிபலின் வாதத்தை ஏற்க முடியாது என்று இடைமறித்தார். "மணிப்பூர் சபாநாயகர் வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு இந்த வழக்குக்குப் பொருந்தாது," என ரோத்தகி வாதிட்டார். இதனைக் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, இந்த வாதங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளீர்கள் என்று அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

"ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகார் நிலுவையில் உள்ளது. மேலும், கலகம் செய்த 11 எம்.எல்.ஏ.க்கள் 21.08.2017 அன்று அரசு தரப்பு கட்சியுடன் இணைந்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் முன் இது தொடர்பான மனுக்கள் நிலுவையில் உள்ளதால் உடனடியாக சபாநாயகரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை" என்று சபாநாயகர் தரப்பு வாதிட்டது.

ஆனால், இதனை ஏற்க முடியாது என்ற தலைமை நீதிபதி மூன்று வருடமாக ஒரு மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது எப்படி நியாயம் ஆகும் என்றார். இந்த சூழலில், அரசு தரப்பு வழக்கறிஞர் மனுவின் மீது பதிலளிக்க 2 வார கால அவகாசம் கேட்டார்.

"மூன்று ஆண்டுகளாக இந்த மனு மீது ஏன் நடவடிக்கை இல்லை என்று பிப்ரவரி 14-ம் தேதி பதில் அளிக்க வேண்டும்," என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: 'நாட்டைவிட்டு வெளியேறுங்கள், இல்லையென்றால் வெளியேற்றப்படுவீர்கள்' - போஸ்டரால் கிளம்பும் புதிய சர்ச்சை

Intro:Body:

ஓபிஎஸ் உட்பட11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு

சபாநாயகர் பிப்ரவரி 14-ம் தேதி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

எம்.மணிகண்டன்

பிப்ரவரி 4, 2020: 

புது டெல்லி:

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.களாக 2017-ல் இருந்த 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் திமுகவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சபாநாயகர் பிப்ரவரி 14-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முன் இன்று வந்தது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். 

அதேபோல், 11 எம்.ஏல்.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். 

இந்த வழக்கின் விசாரணையின் போது, "11 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு அளிக்கப்பட்ட கடித்தத்துக்கு அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. அதன்மீது அவர் முடிவு எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்," என்று திமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

மேலும், இது தொடர்பாக சபாநாயகரிடம் 20.3.2017 ல் மனு அளிக்கப்பட்டது என்ற கபில் சிபல், பல நேரங்களில் அரசுக்கு எதிராக அளிக்கப்படும் மனுக்களை சபாநாயகர் உடனே பரிசீலனை செய்வதில்லை என்றும் ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு எதிரானது என்றால் மறுநாளே அதன்மீது நடவடிக்கை எடுக்கின்றனர் என்று கூறினார்.

"அட்டவணை 10-ன்படி சபாநாயகர் என்பவர் உடனே மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்படுகிற தீர்மானங்கள், கோரிக்கைகள் மீது 3 மாதங்களுக்கு மேலாக கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் அதிகமாக காலக்கெடுவை மீறுகின்ற செயல். இது தொடர்பாக மணிப்பூர் மாநில சபாநாயகருக்கு நீதியரசர் நாரிமன் அண்மையில் வழங்கிய உத்தரவினை கவனத்தில் கொள்ள வேண்டும்," என்று கபில் சிபல் வாதிட்டார்.

ஆனால், பன்னீர் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகியோ கபில் சிபலின் வாதத்தை ஏற்க முடியாது என்று இடைமறித்தார்.

"மணிப்பூர் சபாநாயகர் வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு இந்த வழக்குக்கு பொருந்தாது," ரோத்தகி வாதிட்டார்.

இதனை கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, இந்த வாதங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளீர்கள் என்று அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

"ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகார் நிலுவையில் உள்ளது. மேலும், கலகம் செய்த 11 எம்.எல்.ஏ.க்கள் 21.08.2017 அன்று அரசு தரப்பு கட்சியுடன் இணைந்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் முன் இது தொடர்பான மனுக்கள் நிலுவையில் உள்ளதால் உடனடியாக சபாநாயகரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை" என்று சபாநாயகர் தரப்பு வாதிட்டது.

ஆனால், இதனை ஏற்க முடியாது என்ற தலைமை நீதிபதி மூன்று வருடமாக ஒரு மனுவின் மீது எந்த நடவடிக்கையம் எடுக்காமல் இருப்பது எப்படி நியாயம் ஆகும் என்றார். 

இந்த சூழலில், அரசு தரப்பு வழக்கறிஞர் மனுவின் மீது பதிலளிக்க 2 வார கால அவகாசம் கேட்டார். 

"மூன்று ஆண்டுகளாக இந்த மனு மீது ஏன் நடவடிக்கை இல்லை என்று பிப்ரவரி 14-ம் தேதி பதில் அளிக்க வேண்டும்," என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிததார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பரில் இறந்த பின்னர், அதிமுக கட்சியை அவரது தோழி சசிகலா கைப்பற்றினார். அப்போது, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், சசிகலாவின் தலைமைக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினார்.

இந்த சூழலில், சசிகலா ஆதரவு எம்

எல்.ஏ.க்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் கிராம சொகுசுவிடுதியில் அடைக்கப்பட்டனர். அங்கேயே எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடத்தப்பட்டு, சசிகலாவின் ஆதரவளாக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக்கப்பட்டார் 

இந்த சூழலில் பழனிசாமி அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஓ.பி.எஸ் உட்பட 11 அதிமுக எம்.எல்.ஏக்கள் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் வாக்களித்தனர். 

எனினும், எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை கிடைத்து அவர் வெற்றி பெற்றார். இதற்கிடையே, பன்னீர்செல்வம் கூறியபடி, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை முதல்வர் எடப்பாடி கட்சியைவிட்டு தள்ளிவைத்தார்.

அதன்பேரில், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கொண்ட அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி, அரசை வழிநடத்திய எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அணியில் இணைந்தது.

இதற்கிடையே, அதிமுக அம்மா அணியை இயக்கி வந்த டிடிவிதினகரன் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணிகள் இணைப்புக்கு பிறகு தனியாக இயங்கினார். அவருக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற கோரிக்கை விடுத்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த ஆளும் தரப்பு, சபாநாயகர் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்தது.

அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய காரணத்தால் அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டன என்று காரணமும் சொல்லப்பட்டது.

இந்த சூழலில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு 11 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை திமுக நாடியது. ஆனால், சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கைவிரித்தது. இந்நிலையில், திமுக தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது.

திமுக தறப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வருகிறார். நீண்ட காலமாகவே கிடப்பில் இருக்கும் இந்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கபில் சிபல் கடந்த 24-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முன் முறையிட்டார். அதனை பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி கூறியிருந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று பகல் 11.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.