சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது இரு மகன்கள் அகிலேஷ் யாதவ் மற்றும் பிரத்தீக் யாதவ் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கூறி சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.
இந்த வழக்கு குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் விஸ்வநாத் சதுர்வேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது இரண்டு மகன்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் தற்போதை நிலை குறித்து இன்னும் இரண்டு வாரத்தில் அறிக்கை சமர்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டனர்.