பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சொத்து குவிப்பு வழக்கொன்றிலிருந்து பாட்னா உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்புக்கு எதிராக பிகார் அரசு உச்ச நீதிமன்றத்தில் 2010ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில், “மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) தொடர்ந்த வழக்கில், மாநில அரசு எப்படி மேல்முறையீடு செய்ய முடியும். இதுபற்றி சிபிஐதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சத்தீஷ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி, கொலை வழக்கு ஒன்றிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்த சத்தீஷ்கரின் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும் 2010ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு தவறு என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கும் சிபிஐ தாக்கல் செய்த வழக்குதான். இந்த நிலையில் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவிக்கு எதிரான வழக்கும் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: 'கம்சனைப் போல் நிதிஷ் குமார் தோற்பார்'- தேஜ் பிரதாப் யாதவ்