கரோனா பெருந்தொற்று அதி தீவிரமாகப் பரவி வரும் நிலையில், சுய தனிமை மட்டுமே அதற்கு தற்போதுவரை தீர்வாகவுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி வீட்டில் சமையல்காரராகப் பணிபுரிந்த ஒருவருக்கு கரோனா பெருந்தொற்று உறுதியானது.
இதையடுத்து, நீதிபதியும் அவரது குடும்பமும் தங்களைத் தானாக முன்வந்து தனிமைப்படுத்திக் கொண்டனர். சமையல்காரர் கடந்த 7ஆம் தேதி முதல் விடுப்பில்தான் இருந்து வருகிறார். விடுப்புகாலத்தில் சமையல்காரர் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பெருந்தொற்றுக் காரணமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்குகளை வீட்டிலிருந்தபடியே காணொலி மூலம், விசாரிப்பதால் சமூகப் பரவலுக்கு வாய்ப்புக் குறைவாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும்படிங்க: கரோனா: 48% இந்தியர்களின் வெளிநாட்டுத் திட்டங்கள் பாதிப்பு