நாட்டின் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் கூறி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவிட் 19 லாக்டவுனால் குடிபெயர் தொழிலாளர் சந்தித்த துயரம், பீமா கோரேகான் விவகாரத்தில் சமூக செயல்பாட்டாளர்களின் கைது உள்ளிட்டவற்றில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனங்களை முன்வைத்தார்.
இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக் கூறி பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றஞ்சாட்டி, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ட்விட்டரின் இந்திய பிரிவுக்கு எதிராகவும் அவமதிப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கக் கோரி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: அசோக் கெலாட்டின் சகோதரர் வீட்டில் ரெய்டு; அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றச்சாட்டு!