ETV Bharat / bharat

உள்நுழைவு அனுமதி கோரி வழக்கு: மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!

author img

By

Published : Jun 4, 2020, 1:15 PM IST

Updated : Jun 4, 2020, 1:33 PM IST

டெல்லி: வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறைத் திருத்தம் (2019) மூலம் அஸ்ஸாமுக்கு உள்நுழைவு அனுமதியை மறுத்த குடியரசுத் தலைவரின் உத்தரவை தடைசெய்ய உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஐ.எல்.பி கோரி அசாம் மாணவர் அமைப்பினர் வழக்கு - மத்திய அரசிடம் நீதிமன்றம் விளக்கம் கோரல்

அஸ்ஸாம் மாநிலத்திற்கு இன்னர் லைன் பர்மிட் (Inner Line Permit) எனப்படும் உள்நுழைவு அனுமதி வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டுமெனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அஸ்ஸாம் மாணவர் சங்கங்கள் இணைந்து மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளன.

அந்த மனுவில், "அரசியல் ரீதியான காரணங்களுக்காக மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட 1873 வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறைத் (2019) திருத்தத்தை அஸ்ஸாம் மக்கள் எதிர்க்கிறோம்.

2019ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அஸ்ஸாம் மண்ணின் உரிமையையும் கேலிக்குள்ளாக்கும்விதமாகவே உள்நுழைவு அனுமதி மீதான தடையை நாங்கள் கருதுகிறோம்.

மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அஸ்ஸாம் மாநிலத்திற்கு மீண்டும் உள்நுழைவு அனுமதியை வழங்க வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவிற்கு தடைவிதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான விளக்கத்தை அளிக்குமாறு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை அனைத்து தை அஹோம் மாணவர் சங்கமும், அஸ்ஸாம் ஜாதியா தபாடி யூபா சத்ரா பரிஷத்தும் இணைந்து தொடுத்திருந்தன என்பது கவனிக்கத்தக்கது.

Last Updated : Jun 4, 2020, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.