மியான்மரிலிருந்து வங்கதேசம் வழியாக சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய ரோஹிங்கியா அகதிகளை இந்தியாவைவிட்டு நாடு கடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு மார்ச் மாதத்துக்குள் பதலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், மனுதாரர் தரப்பிலிருந்து ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "சட்டப்பிரிவு 21 எந்தவொரு அகதியையும் நாடு கடத்த அனுமதிக்கவில்லை" என்றார்.
மேலும், "இந்தியாவுக்கு வரும் எந்த அகதிகளையும் திரும்ப அனுப்ப முடியாது. அவர்களை நீண்ட கால விசாக்களில் தங்க அனுமதிக்க வேண்டும்" என்றும் பூஷன் கூறினார்.
அப்போது மற்றொரு வழக்கறிஞர் குறுக்கிட்டு, "மியான்மர் அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள தயாராகவே உள்ளது, எனவே இன்னும், அவர்களை எவ்வாறு அகதிகள் என்று அழைக்க முடியும்?" என்றார்.
இதற்கு பதிலளித்த பூஷன், ரோஹிங்கியா அகதிகள் உயிர் பிழைக்கவே அங்கிருந்து தப்பி வந்துள்ளனர் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக மத்திய அரசு மார்ச் மாதத்துக்குள் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்
இதையும் படிங்க: குஜராத்தில் எளிய முறையில் திருமணம் முடிக்க இருக்கும் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடி!