நாடு முழுவதும் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டு 70 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன. 2017-18ஆம் ஆண்டில், 148 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், மனித உரிமைகள் ஆணையத்திடம் இது தொடர்பான பல ஆவணங்கள் அளிக்கப்படவில்லை.
குற்றங்கள் தொடர்பான 38 விழுக்காடு தகவல்கள் மட்டுமே மனித உரிமைகள் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 வழக்குகள் மட்டுமே விசாரணைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவல் நிலைய மரணங்கள் குறித்தும், நாடு முழுவதும் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்படுகின்றனவா என்பது குறித்தும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.