மெட்ரோ கார் கொட்டகை அமைக்க ஆரே காலனியில் மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் போராட்டங்கள் நடந்தன. இப்பகுதியில் மரங்கள் வெட்ட தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மரங்கள் வெட்ட இடைக்காலத் தடைவிதித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் வழக்கு மீண்டும் கடந்த மாதம் (அக்டோபர்) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மரங்கள் வெட்ட மட்டுமே தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ கார் கொட்டகை அமைக்க தடையில்லை என்று விளக்கம் அளித்திருந்தனர். மேலும் மரங்கள் வெட்டுவதற்கு பதிலாக, மும்பையை பச்சை பசேலென்று மாற்றுங்கள் என்று மாநகராட்சியையும் அறிவுறுத்தினர்.
இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மேலும் மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டனர். இந்த இடைக்காலத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
சஞ்சய் காந்தி தேசிய பூங்காவை ஒட்டியுள்ள ஆரே காடு ஐந்து லட்சம் மரங்களைக் கொண்டுள்ளது. அப்பகுதியில் மும்பை மெட்ரோ-3 திட்டத்துக்காகவும் குறிப்பாக ஒரு கார் கொட்டகை அமைப்பதற்காகவும் மரங்களை வெட்ட கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் ஆரேவை ஒரு காடாகவோ அதனை சுற்றுச்சூழல் பிரச்னையாகவோ அங்கீகரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையும் படிங்க : 15,000 நீதிபதிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய தலைமை நீதிபதி!