உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனிதத் தலங்களை சாலை மார்க்கமாக இணைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை சார் தாம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்திற்கான சாலை 5.5 மீட்டராக முதலில் சுற்றறிக்கை விடப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசு அதை 7 மீட்டராக விரிவாக்க முடிவெடுத்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்தத் திட்டம் குறித்து ஆய்வு நடத்த நிபுணர் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இந்த திட்டத்தை விரிவாக்கும் பட்சத்தில் அது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து சார் தாம் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட வனப் பகுதிகளை சரி செய்யும் வகையில் புதிய மரங்களை நடவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய கல்விக்கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - மேற்கு வங்க அரசு