பிஎஸ் 4 ரக வாகனங்களை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் விற்பனை செய்யக்கூடாது என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே கரோனா வைரஸ் காலத்தில் ஏற்பட்ட விற்பனை சரிவை சரி செய்வதற்காக பிஎஸ் 4 ரக வாகங்களை விற்பனையில் உச்ச நீதிமன்றம் மாற்றம் செய்ய வேண்டும் என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து பிஎஸ் 4 ரக வாகனங்களை டெல்லி - என்சிஆர் பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் 30 நாள்கள் விற்றுக்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து நடந்த விசாரணையில், மார்ச் 27ஆம் தேதிக்கு பின்னர் விற்பனை செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்களின் விற்பனை விவரங்களை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கமும், பதிவு செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்களின் விவரங்களை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூலை31) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், “நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் அதிகளவி பிஎஸ் 4 ரக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது. முக்கியமாக மார்ச் 29 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையில் வாகன விற்பனையை ஆய்வு செய்தபோது அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நீங்கள் சிக்கிலில் உள்ளீர்கள். நீதிமன்றத்தின் உத்தரவை மீறியவர்கள் மீது சட்ட நீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தனர்.
பின்னர் உச்ச நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும்வரை பிஎஸ் 4 ரக வாகனங்கள் பதிவு செய்வதற்கு தடை விதித்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: விராட் கோலி, தமன்னாவை கைது செய்ய கோரி வழக்கு!