உச்ச நீதிமன்ற பார் கிளார்க்ஸ் அசோசியேஷன் (எழுத்தர் சங்கம்) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், “குமாஸ்தாக்களுக்கு நிதிநிலை திரும்ப உதவுவதற்காக யூனியன் ஆஃப் இந்தியா, பார் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் ஆகியவைகளுக்கு வழிமுறைகளை வழங்கவேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “அரசின் பொதுமுடக்க அறிவிப்புதான், குமாஸ்தாக்களின் தற்போதைய துயரத்துக்கு காரணம். மக்களின் வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் காக்க வேண்டியது அரசின் கடமை.
மேலும், குமாஸ்தா போன்ற குறைந்த வருமானம் உடையவர்களின் வாழ்வில் துயரங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியாது.
ஆகவே, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையுடன், 2005 ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 11ஆவது பிரிவின் கீழ் இதுதொடர்பாக ஒரு தேசிய திட்டத்தை வகுக்க வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் பதவி நீட்டிப்பு