டெல்லி: எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் நாகேஷ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ராஸ்டோகி உள்ளிடோர் அடங்கிய அமர்வு, அம்மனுவை விசாரித்தது.
அப்போது, சாட்சியங்கள் இல்லாது நான்கு சுவருக்குள் எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டால் அது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வராது என்றும் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டால் மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவ்வழக்கை பதிவு செய்யமுடியும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருவர் பேசினால் மட்டுமே அது குற்றமாகவும் எனவும் தெரிவித்தனர்.
பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு பல்வேறு சிவில் உரிமைகள் மறுக்கப்படுவதாலும், அச்சமுதாயத்தினர் சமூகத்தில் மேம்பாடு அடைவதற்காக உருவாக்கப்பட்டதே இச்சட்டம் என குறிப்பிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர் எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்தர் எனும் போது, அவமானப்படுத்தும் நோக்கத்துடன் குற்றம்சாட்டப்பட்டவர் செயல்பட்டார் என்பது நிறுவப்படவேண்டியது அவசியம் என்றனர்.
இதையும் படிங்க: 'அரசு நிலங்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனித் துறையை உருவாக்க வேண்டும்'