ETV Bharat / bharat

'டெல்லி போலீஸ் குற்றவாளிகளைப் பிடித்திருந்தால் கலவரத்தைத் தடுத்திருக்கலாம்' - உச்ச நீதிமன்றம் விமர்சனம் - டெல்லி ஷாஹீன் பாக் பொது நல வழக்கு

டெல்லி : டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைஒ பிடித்திருந்தால், அதனைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என டெல்லி காவல் துறையினரை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

supeme court
supeme court
author img

By

Published : Feb 26, 2020, 1:45 PM IST

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தால் சாலைப் போக்குவரத்து பாதிப்பதாகவும், அதனை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போராட்டக்கார்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சன்ஜெய் ஹெட்ஜ், சன்தான ராமசந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் வாஜாஹட் ஹபிபுல்லா ஆகியோரை கடந்த வாரம் மத்தியஸ்தர்களாக நியமித்தது.

நீதிமன்ற உத்தரவின்படி, மத்தியஸ்தர்கள் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களைச் சந்தித்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், அதுகுறித்து அறிக்கையும் தயார் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சன்ஜெய் கிஷான் கவுல், கெ.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஸ்தர்கள் தாங்கள் தயார் செய்த அறிக்கையை நீதிபதிகள் முன் சமர்ப்பித்தனர்.

அதனைப் பெற்றுக்கொண்ட நீதிபதிகள், "ஓய்வில்லாமல் போராட்டங்கள் நடத்த வீதிகள் ஒன்றும் போராட்டக்களங்கள் அல்ல. மத்தியஸ்தர்கள் சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்வோம்" என்றனர். இதையடுத்து, இந்த வழக்கை மார்ச் 23ஆம் தேதி ஒத்துவைக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, டெல்லியில் நடந்த கலவரம் குறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம், "டெல்லியில் நடந்த கலவரம் துரதிருஷ்டவசமானது. கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறை தவறிவிட்டது. அப்படி செய்திருந்தால் கலவரத்தைத் தடுத்திருக்கலாம்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் சட்டஒழுங்கு கெட்டுப்போனால் காவல் துறையினர் தங்கள் கடமையைச் சரிவர செய்வர். டெல்லி கலவரம் குறித்து இனி யாரும் மனு தாக்கல் செய்யக் கூடாது" எனக் கூறியது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டம், கடந்த இரு நாள்களாகக் கலவரமாக மாறியுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வெடித்துள்ள இக்கலவரத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, சமூக ஒற்றுமை பாதிக்கப்படும் அபாயம் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலவரம் தொடர்பான சம்பவங்களில் படுகாயமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : பாதுகாப்புப் படை வேண்டும் - உள்துறை அமைச்சருக்கு கெர்ஜிவால் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.