ETV Bharat / bharat

ஒமர் அப்துல்லா விடுதலை தொடர்பாக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ள நீதிமன்றம்!

டெல்லி : பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒமர் அப்துல்லாவை விடுவிப்பது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

SC adjourns plea seeking Omar Abdullah's release from detention
ஒமர் அப்துல்லா விடுதலை தொடர்பில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ள நீதிமன்றம்!
author img

By

Published : Mar 19, 2020, 2:26 PM IST

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவைப் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, அவரது தங்கையும் ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டின் மனைவியுமான சாரா அப்துல்லா பைலட் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தொடுத்திருந்தார்.

அம்மனுவில், “அரசியலமைப்பின் சிறப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டத்தை ஜனநாயக வெளிகளில் எதிர்ப்போரை மெளனிக்க வைக்கும் தந்திரமாக அரசியல் தலைவர்கள் உட்பட தனிநபர்களை தடுத்து வைக்க குற்றவியல் நடைமுறை குறியீட்டின் கீழ் அலுவலர்கள் தமது அதிகாரங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான நோக்கம் அவரை (ஒமர் அப்துல்லாவை) மட்டுமல்ல, தேசிய மாநாட்டு கட்சியின் முழு தலைமையையும், அதேபோல் ஜம்மு-காஷ்மீருக்காக சேவை செய்த ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைமையையும் சிறையில் அடைப்பதே ஆகும். பல ஆண்டுகளாக இந்திய ஒன்றியத்தோடு துணையாக நின்றவர்களை, ஏன் இந்த அரசு பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வைத்திருக்கிறது ? என்ற கேள்விக்கு இதுவரை எந்தவித நியாயமான காரணமும் அவர்களால் சொல்ல முடியவில்லை.

தடுப்புக்காவல் உத்தரவுக்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல், ஆறு மாதங்கள் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனவே பிப்ரவரி 5ஆம் தேதி உத்தரவின்படி, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவை தடுத்து வைத்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். உடனடியாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என அதில் கோரப்பட்டுள்ளது.

SC adjourns plea seeking Omar Abdullah's release from detention
ஒமர் அப்துல்லா விடுதலை தொடர்பில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ள நீதிமன்றம்!

இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மிஸ்ரா, "நீங்கள் அவரை விடுவிக்கிறீர்களா ? இல்லையா ? என்பது குறித்த அறிவுறுத்தலைப் பெற்றுள்ளீர்களா?" என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேள்வியெழுப்பினார்.

பின்னர், “ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தடுத்து வைத்திருக்கும் ஒமர் அப்துல்லாவின் விடுவிப்புக் குறித்து விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும், அதன் அடிப்படையில் தடுத்து வைக்கப்படுவதற்கு எதிராக சாரா அப்துல்லா பைலட் தொடுத்த மனுவை நீதிமன்றம் விசாரிக்கும்” என தேதி குறிப்பிடாமல் இவ்வழக்கை ஒத்திவைத்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்புச் சட்டங்கள் 370 & 35ஏ நீக்கம் செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசால் பிரிக்கப்பட்டது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் மக்கள் தலைவர்கள் பலர் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். 2020 பிப்ரவரி 5ஆம் தேதி, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அத்தலைவர்களுக்கு எதிராக பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி தடுப்புக்காவலை அரசு நீட்டித்துள்ளதது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கரோனா பாதிக்கப்பட்டவர்களை தங்களது பகுதியில் தங்கவைக்க கூடாதென மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.