கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ''சீன வீரர்கள் நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை'' எனப் பேசினார். இதனை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய செயற்கைக்கோள் புகைப்படங்களைத் தற்போது வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ''பிரதமர் மோடி உண்மையில் ஒரு சரன்டர் (surrender) மோடி. சீனாவிற்குப் பயந்து இந்திய எல்லையை மோடி அந்நாட்டிடன் ஒப்படைத்துவிட்டார்'' எனப் பதிவிட்டுள்ளார்.