மேற்குவங்கம், சாரதா நிதி நிறுவன வழக்கில் ஆதாரங்களை மறைத்ததாகக்கோரி கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாரை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே, இரண்டு முறை நீதிமன்ற அழைப்பாணையை அவமதித்து ராஜீவ்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மூன்றாவது முறையாக அவருக்கு அழைப்பு விடப்பட்டது. இதிலும் அவர் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்தார்.
எனவே, ராஜீவ்குமாரின் வழக்கறிஞர், முன்ஜாமீன் கேட்டு அலிப்பூர் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் அளித்த மனுக்கள், அவர் ஆஜராகததால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள ராஜீவ்குமாரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
மேலும் படிங்க:
சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு - முன்னாள் காவல் ஆணையர் இன்று ஆஜராக சம்மன்!
சாரதா நிதி மோசடி விவகாரம்: சிக்குகிறார் கொல்கத்தா காவல் ஆணையர்?