ETV Bharat / bharat

பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து செய்த உச்ச நீதிமன்றம்!

டெல்லி: சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் இரண்டு வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு பேரும் பதவியேற்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

Sankarapuram Village panchayat election Chidambaram appeared for Congress candidate in SC
பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து : பதவியேற்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
author img

By

Published : Feb 15, 2020, 7:25 AM IST

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வெற்றி சான்றிதழையு தேர்தல் அலுவலர் தேவிக்கு வழங்கினார்.

ஆனால், ஆளும் அதிமுக தரப்பு தலையீடு காரணமாக தேர்தல் அதிகாரி மீண்டும் வாக்குகளை எண்ண உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் தேவிக்கு வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு, மறுநாள் காலை 5 மணிக்கு அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரியதர்ஷினியை வெற்றி பெற்றதாக அறிவித்து அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் வழங்கியுள்ளார்.

இதனை எதிர்த்து தேவி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் அதிகாரிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கவும் அதிகாரம் இல்லை என்று கூறியது. மேலும், அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரியதர்ஷினி தேர்தல் வழக்கு மட்டுமே தொடரமுடியும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரியதர்ஷினிஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இரு வழக்குகளும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வில் நேற்று (பிப்ரவரி 14ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது.

Sankarapuram Village panchayat election Chidambaram appeared for Congress candidate in SC
பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து : பதவியேற்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் பிரியதர்சினி சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறுகையில், ’1000 வாக்குகளுக்கு மேல் எண்ணப்படவில்லை. மேலும், முதலில் தேவிக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் தேர்தல் அலுவலரின் முத்திரைக் கூட இடப்படவில்லை. ஆகவே, அது திரும்பப்பெறப்பட்டது. எனவே, முதலில் வழங்கிய சான்றிதழ் அதிகாரப்பூர்வமானது அல்ல. மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, பிரியதர்சினி வெற்றி பெற்றார். அப்படி இருக்கும்போது முதலில் கொடுக்கப்பட்ட வெற்றி சான்றிதழ் செல்லாதது ஆகிவிடும்’ என்று வாதிட்டார். காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி தரப்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார். முதலில் வழங்கப்பட்ட சான்றிதழை திரும்பப் பெற முடியாது என்று ப.சிதம்பரம் தனது வாதத்தை முன் வைத்தார். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ’தேர்தல் எண்ணிக்கையை முழுமையாக முடிக்காமல் தேர்தல் அதிகாரி காங்கிரஸ் ஆதரவு வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார். அதனால் அவர் மாவட்ட ஆட்சியரால் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தது உண்மையே’ என்று அவர் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை வழங்கிய உத்தரவுக்கு தடைவிதித்ததோடு காங்கிரஸ் ஆதரவு வேட்பாளருக்கு நோட்டிஸ் அளித்தது. மேலும், இருவரில் யாருமே சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது.

இதையும் படிங்க : 'மிகவும் வேதனையடைந்தேன்' - அதிருப்தியடைந்த மம்தா

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.