அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளிடம் அனுமதி பெறாமல் வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இந்தத் திட்டத்தால் நிலத்தடி நீர் அழிந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இதை எதிர்க்கின்றார்கள். புதுச்சேரி முதலமைச்சரும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என உறுதியளித்தார்.
ஆனால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகத் தம்பட்டம் அடிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் சாதிக்கின்றார். ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுவது உறுதியாகிவிடும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தன்னிச்சையாக செயல்படும் கிரண்பேடி - முதலமைச்சர் குற்றச்சாட்டு