கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே மூன்றாம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நேரத்திலும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் ஆகியோர் அயராது உழைத்துவருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், உயிரை பணயம் வைத்து கரோனா பாதிக்க நோயாளிகளை பார்த்துக்கொள்ளும் மருத்துவர்கள், செவிலியர்களை கௌரவிக்கும் விதமாக மணல் ஓவியத்தை பூரி கடற்கரையில் உருவாக்கியுள்ளார்.
இதற்கு முன்னர், பிரதமரின் வார்த்தையை கிரியேட்டிவிட்டி மூலம் மணல் ஓவியத்தில் கொண்டு வந்த அவரை பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மாஸ்க் இல்லையா... வாங்க கரோனா நோயாளியுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்' - மரண பயம் காட்டிய திருப்பூர் போலீஸ்!