ETV Bharat / bharat

முதலமைச்சர் பணம் கொடுத்த விவகாரம் குறித்து எந்த புகாரும் வரவில்லை: ஆட்சியர் ரோகினி விளக்கம்...!

author img

By

Published : Apr 17, 2019, 5:16 PM IST

Updated : Apr 17, 2019, 5:27 PM IST

சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் பணம் கொடுத்த விவகாரம் குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி விளக்கமளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ரோகிணி

சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவுக்கானப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரோகினி ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்றது. இதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முறையான ஆய்வுக்குப் பின்னர் ஆயுதமேந்திய காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்போடு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் அளித்த வாக்கை உறுதி செய்வதற்கான விவிபேட் இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரோகினி சேலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரடியாக பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் ரவுடிகள் பலர் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் வாக்கு சேகரிப்பின் போது சேலத்தில் பெண் ஒருவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்தது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரோகினி, இதுதொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும், இதுதொடர்பாக ஊடகங்களில் வந்த தகவலை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.

Intro:வாக்கு சேகரிப்பின் போது பெண் ஒருவருக்கு தமிழக முதலமைச்சர் பணம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று சேலம் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரோகிணி தெரிவித்துள்ளார்.

Body:மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதையொட்டி சேலம் தொகுதிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ரோகிணி ஆய்வு மேற்கொண்டார். சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் வேட்பாளர்கள் பெயர்கள் மட்டும் சின்னங்கள் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்த வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது. முறையான ஆய்வுக்குப் பின்னர் அங்கிருந்து வாகனங்கள் வாயிலாக ஆயுதமேந்திய காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்போடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள் தான் அளித்த வாக்கை உறுதி செய்வதற்கான இயந்திரங்கள் அனுப்பப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரோகினி மக்களவைத் தேர்தலில் வாக்கு பதிவிற்காக அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் எந்த அச்சமுமின்றி வாக்களிக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் சேலத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் என்ன கண்டறியப்பட்டுள்ளன பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரடியாக பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் ரவுடிகள் பலர் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். மேலும் சேலத்தில் உள்ள 46 மலை கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப். பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து வாக்கு சேகரிப்பின் போது சேலத்தில் பெண் ஒருவருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்தது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரோகினி, இது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் இருப்பினும் இது தொடர்பாக ஊடகங்களில் வந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பேட்டி-ரோகிணி

Conclusion:பின்னர் அங்கிருந்து வாகனங்கள் வாயிலாக ஆயுதம் ஏந்திய காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்போடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டது.
Last Updated : Apr 17, 2019, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.