ETV Bharat / bharat

எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு: அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா - அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா

புதுச்சேரி: எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து அவமதித்தவர்களை கைது செய்யக் கோரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

mlas-dharna-in-pudhucherry
mlas-dharna-in-pudhucherry
author img

By

Published : Jul 23, 2020, 10:49 PM IST

புதுச்சேரி வில்லியனூர் புற வழிசாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு இன்று (ஜூலை23) சிலர் காவி துண்டை அணிவித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

அதையறிந்த புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், கட்சி நிர்வாகிகள் சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா

அங்கு சென்ற அவர்கள் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து அவமதித்தவர்களை கைது செய்யக் கோரி சிலையின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வில்லியனூர் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்புகளை நீக்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.