ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ராஜ்புட் கலாச்சாரத்தை மீட்கும் விதத்தில் வடிவமைப்பாளர் ஒருவர் தங்கத்தில் தலைப்பாகை தயாரித்துள்ளார். இது முழுவதும் 24 கேரட் தங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. 'சஃபா' என்று அழைக்கப்படும் இந்தத் தலைப்பாகை பெரும்பாலும் விஷேச நாட்களில் அல்லது திருமணத்திற்கு அணிந்து கொள்வர். தங்கத்தால் தயாரிக்கப்பட்ட இந்த சஃபாவின் விலை ரூ.22 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக சஃபா தயாரித்த வடிவமைப்பாளர் புபேந்திர சிங் ஷேகவாத் கூறியதாவது, "சஃபா தங்கம் மற்றும் வெள்ளியினால் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதனை தங்கத்தில் யாரேனும் தயாரித்து உள்ளார்களா என்று இணையத்தில் தேடி பார்க்கையில் யாரும் தயாரிக்கவில்லை என்று தெரிந்தது. அதனையடுத்து தங்கத்தால் செய்ய முயற்சிக்கலாம் என்று தயாரித்து, அதை வெற்றிகரமாக செய்ய முடிந்தது.
இதன் விலை அதிகமாக இருக்கும் என்பதாலேயே இதனை யாரும் தயாரிக்காமல் இருந்தனர். மேலும் இதனை தயாரிக்க எனக்கு 48 பேர் உதவி புரிந்தனர். முதலில் காப்பரில் தான் தயாரிக்கப்பட்டது, அதன் பின்னர் தங்கத்தாலும், வெள்ளியாலும் தயாரித்தோம். இந்த சஃபாவினை ராஜஸ்தானில் உள்ள பிரபல நிறுவனம் வாங்கவுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ப.சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!