தமிழ்நாட்டில் 38 தொகுதிகள், கா்நாடகாவில் 14, மகாராஷ்டிராவில் 10 என மொத்தம் 12 மாநிலங்களிலுள்ள 96 தொகுதிகளுக்கு மக்களவைத்தேர்தல் இன்று இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியிலுள்ள ஜெயநகரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அதேபோல் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா தனது குடும்பத்தாருடன் வாக்களித்தார்.