ETV Bharat / bharat

இது இல்லைன்னா சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடியாது?

திருவனந்தபுரம்: கரோனா தொற்று இல்லை என அளிக்கப்பட்ட சான்றிதழ்களைக் காட்டும் பக்தர்களே சபரிமலை ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கேரள தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது.

devotees
devotees
author img

By

Published : Dec 20, 2020, 8:36 PM IST

ஆர்டிபிசிஆர் சோதனையில் கரோனா இல்லை என உறுதியான பின்னர் வழங்கப்படும் சான்றிதழ்களை கட்டாயம் பக்தர்கள் காட்ட வேண்டும், கரோனா பரிசோதனை செய்தவர்கள் மட்டுமே சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கேரள தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது. முன்னதாக பக்தர்கள் ஆலயத்திற்கு வர ஆன்டிஜென் பரிசோதனை போதுமானதாக கருதப்பட்டது.

இது தொடர்பாக கேரள தேவஸம் போர்டு தலைவர் வாசு,”48 மணி நேரத்திற்கு முன்னதாக பக்தர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் பெறப்பட்ட கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ்களுடன்தான் சபரிமலைக்கு வர வேண்டும். டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ்கள் இல்லாதவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்”என்றார்.

கேரள உயர் நீதிமன்றம் 5 ஆயிரம் பக்தர்களை ஆலயத்திற்குள் வழிப்பாட்டிற்கு அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளது. திங்கள் முதல் வெள்ளிவரையில் 2 ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாள்களில் 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேரள தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவாக்சின் மூன்றாம் கட்டப் பரிசோதனை : தன்னார்வலர்கள் கிடைக்காமல் திண்டாடும் எய்ம்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.