கடந்த 52 நாட்களாக, தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். நவம்பர் 5ஆம் தேதிக்குள் போராட்டத்தை நிறுத்தி வேலைக்கு திரும்ப வேண்டும் இல்லையெனில் அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்தார். இருந்தும், போராட்டம் தொடர்ந்தது. இதுகுறித்து தெலங்கானா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
போக்கவரத்து கழகம் தனியார்மயமாக்கப்படுவதை நீதிமன்றத்தால் தடுத்த நிறுத்தமுடியாது. அதற்கான அதிகாரம் தங்களிடம் இல்லை என தெலங்கானா நீதிமன்றம் கருத்து கூறியது. இதனிடையே, போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்றவந்த போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ஆனால் பணிக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு எதிராக எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என போக்கவரத்து கழகம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!