இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் அதிக அளவிலான குற்றச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குற்றச் செயல்கள் செய்வதற்கான விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதனோடு இணைத்து இந்தச் சேவைகளுக்கு இதுதான் விலைப் பட்டியல் என்ற கூறி, துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்த விலைப் பட்டியலின் அடிப்படையில் மிரட்டலுக்கு ஆயிரம், அடிப்பதற்கு 5 ஆயிரம், அடித்து காயம் ஏற்படுத்துவதற்கு 10 ஆயிரம், கொலை செய்வதற்கு 55 ஆயிரம் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் நிறைவான சேவை வழங்கப்படும் என உறுதியளித்து அலைபேசி எண்ணையும் இணைத்துள்ளார்.
இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அந்த இளைஞரைத் தேடினர். பின்னர் அவர் சவுகாடா கிராமத்தில் வசிக்கும் ராணுவ வீரரின் மகன் எனத் தெரியவந்தது.
இதைப்பற்றி காவல் துறை அலுவலர்கள் கூறுகையில், இந்த விவகாரம் பற்றி உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் ரகளை செய்த மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை... சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!