ETV Bharat / bharat

மாஸ்க் அணியாவிட்டால் இவ்வளவு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமா? - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: முகக்கவசம் அணியாதவர்கள் 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
author img

By

Published : Nov 19, 2020, 4:54 PM IST

கரோனாவின் தாக்கம் உலகின் பல்வேறு பகுதிகளில் குறைந்துவருகிறது. இருப்பினும், ஒரு சில பகுதிகளில் அதன் இரண்டாவது அலை தொடங்கியிருப்பதாக அச்சம் கொள்ளப்படுகிறது. இதற்கிடையே, டெல்லியில் கரோனா எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், முகக்கவசம் அணியாதவர்கள் 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "டெல்லியில், பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளனர். இருப்பினும், சிலர் அணியாமல் உள்ளனர். எனவே, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இதுவரை, அபராதத் தொகை 500 ரூபாயாக இருந்தது. முகக்கவசம் அணியும் பட்சத்தில் மக்களிடையே கரோனா பரவும் அபாயம் குறைவு. மத, சமூக, அரசியல் அமைப்புகள் முகக்கவசங்களை விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்" என்றார்.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, செய்திகாளர்களைச் சந்தித்த அவர், "மக்களுக்கு ஒற்றுமையுடன் சேவை செய்வதற்கு இதுவே சரியான காலம் என்பதை அனைத்து கட்சிகளும் ஒப்புக் கொண்டன. அரசியல் கட்சிகள் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

அதுகுறித்து ஆராய்வோம். மக்களுக்கு இது இக்கட்டான காலம் எனக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளிடம் தெரிவித்தேன். அரசியல் செய்வதற்கு இது நேரமல்ல. அதுற்கு வாழ்நாள் முழுவதும் உள்ளது. இது மக்களுக்கு சேவை செய்யும் நேரம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.