கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நேடும்கண்டத்தைச் சேர்ந்த பெயிண்ட்டர் விஜயன் -சுமா தம்பதியரின் மகன் ஆனந்து. இவர் ஏழ்மை காரணமாக தனது எம்பிஏ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு எர்ணாகுளத்தில் எலாம்குளம் கோயிலில் பணிபுரிந்துவருகிறார். இவரது சகோதரர் அரவிந்த் கட்டப்பனாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார், இவரது சகோதரி அதிரா கரோனா ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் உள்ளார்.
இந்நிலையில், ஆனந்து ஓணத்திற்கு வாங்கிய லாட்டரி தற்போது விழுந்துள்ளது. பம்பராக விழுந்துள்ள இந்த லாட்டரியின் மதிப்பு பத்து இல்லை நூறு இல்லை, ரூபாய் 12 கோடியாகும். இதன் மூலம் ஆனந்தின் அனைத்து ஆசைகளும் நிறைவேறவுள்ளது.
இது குறித்து ஆனந்து குடும்பத்தார் கூறுகையில், “இந்த பணத்தை கொண்டு சரியான பாதியுள்ள ஒரு நிலத்தை வாங்கி அதில் ஒரு அழகான வீடு கட்டவும், இதன் மூலம் ஆனந்து சகோதரியின் திருமணத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமின்றி ஆனந்து மேற்க்கொண்டு படிக்கவும் உள்ளார்” என்றனர்.
தற்போது ஆனந்தும், அவரது குடும்பமும் மழைக்காலத்தில் தண்ணீரால் ஆக்கிரமிக்கும் வீட்டிலும், சகதியால் நிறைந்த சாலையையும் பயன்படுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...பஞ்சாபில் உச்சத்தை தொடும் உழவர் போராட்டம்: தொடர் ரயில் மறியல் இன்று தொடக்கம்!