நாடு முழுவதும் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்க இருக்கிறது. நாளை முதல் தொடங்கும் தேர்தல் மே 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நாளைய தினம் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலோடு ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க இருப்பதால் அம்மாநிலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியோடு தேர்தல் பரப்புரைக்கான நேரம் முடிவடைந்தது. இதனையடுத்து நேற்று ஆந்திர தேர்தல் அலுவலர் கோபால கிருஷ்ணா செதியாளர்களை சந்தித்தார்.
அதில் பேசிய அவர், ‘தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 116 கோடி ரூபாய், 101 கிலோ தங்கம், 330 கிலோ வெள்ளி, 33.2 கோடி மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.
இந்தியாவில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்படும் பொருட்களின் மதிப்பில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.