ETV Bharat / bharat

சாலைகளைச் செப்பனிட 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு - முதலமைச்சர் நாராயணசாமி - புதுச்சேரி சாலை பாதுகாப்பு வாரம்

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தின் சாலைகளைச் செப்பனிட ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

rs 100 crore allocated for repairing roads in puducherry
சாலைகளை சீர்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு - முதல்வர் நாராயணசாமி
author img

By

Published : Jan 27, 2020, 10:19 PM IST

புதுச்சேரி மாநிலத்தின் 31ஆவது சாலை பாதுகாப்பு வார சிறப்பு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. சாலை பாதுகாப்பில் இளைஞர் சமூகத்தினரால் மாற்றம் கொண்டு வருவதால் என்ற கருத்தின் அடிப்படையில் நடைபெறும் இவ்விழாவில் புதுச்சேரி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை எடுத்துக்கூறும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுச்சேரி சாரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை முதலமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கினை ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், ”புதுச்சேரியில் 2017ஆம் ஆண்டு சாலை போக்குவரத்தில் 700 விபத்துகள் ஏற்பட்டன. இது 2018ஆம் ஆண்டில் 149ஆக குறைந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி 49 விழுக்காடு விபத்துகள் குறைந்துள்ளன. இதற்கு காரணம் புதுச்சேரி காவல்துறை, போக்குவரத்துத் துறை, வாகன ஓட்டிகள்தான்.

சாலைகளை சீர்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு - முதல்வர் நாராயணசாமி

இந்த விபத்து விழுக்காடு இன்னும் குறைக்கப்பட வேண்டும். சாலை விபத்துகளைக் குறைப்பதற்கு புதுச்சேரியில் சாலைகளைச் செப்பனிட 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் நகர மற்றும் கிராமப்புற பகுதியில் சாலை பழுது, சேதங்கள் ஆகியவற்றினை சரி செய்து ஒழுங்கான சாலைகள் அமைக்கப்படும். சாலை விபத்துகளை குறைக்க நகர போக்குவரத்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

விழாவில் டிஜிபி பாலாஜி ஸ்ரீ வத்ஷவா, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : என்.ஆர்.சி.யில் திருநங்கைகள் நீக்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Intro:புதுச்சேரியில் சாலைகளை செப்பனிட ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 40% விபத்துக்கள் குறைந்துள்ளன என்றும் சாலை பாதுகாப்பு வார விழாவில் முதல்வர் நாராயணசாமி பேச்சு

Body:33வது சாலை பாதுகாப்பு வார சிறப்பு நிகழ்ச்சி இன்று தொடங்கியது சாலை பாதுகாப்பில் இளைஞர் சமூகத்தினரால் மாற்றம் கொண்டு வருவதால் என்ற கருத்தின் அடிப்படையில் நடைபெறும் இவ்விழாவில் புதுச்சேரி யூனியன் ஆட்சி பகுதியில் வாகன ஓட்டிகளுக்கும். பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை சென்றடையும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

புதுவை சாரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கினை ஏற்றி வைத்து விழாவினை துவக்கி வைத்தனர்

பின்னர் விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி யில் 2017 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்தில் 700 விபத்துக்கள் ஏற்பட்டன என்றும் இது 2018ம் ஆண்டில் 149 ஆக குறைந்துள்ளது என்றார் இப்போது 2019 ஆம் ஆண்டின் சதவீத படி 49 சதவீதம் விபத்துக்கள் குறைந்துள்ளன என்றும் பேசியவர் இதற்கு காரணம் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை மற்றும் வாகன ஓட்டிகள் தான் என்றார்

இந்த சதவீதம் இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்றவர் சாலை விபத்துகளை குறைப்பதற்கு புதுச்சேரியில் சாலைகளை செப்பனிட ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்த நிதியின் மூலம் நகர மற்றும் கிராமப்புற பகுதியில் சாலை பழுது சேதங்கள் ஆகியவற்றினை சரி செய்து ஒழுங்கான சாலைகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் சாலை விபத்துகளை குறைக்க நகர போக்குவரத்து மற்றும் லாரி ஓட்டுனர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

விழாவில் டிஜிபி பாலாஜி ஸ்ரீ வத்ஷவா புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்திலிங்கம் கோகுலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Conclusion:புதுச்சேரியில் சாலைகளை செப்பனிட ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 40% விபத்துக்கள் குறைந்துள்ளன என்றும் சாலை பாதுகாப்பு வார விழாவில் முதல்வர் நாராயணசாமி பேச்சு
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.