ஒடிசா மாநிலத்தின் போக்குவரத்து ஆணையம் வாகன ஓட்டிகள் சரியான ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும், போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர். இந்நிலையில், மாநில போக்குவரத்து ஆணையம்(STA) திருத்தப்பட்ட எம்.வி சட்டத்தை (MV Act) மார்ச் 1 ஆம் தேதி நடைமுறைக்கு கொண்டுவந்தனர்.
சட்டம் அமலுக்கு வந்த முதல் நாள், மாநிலம் முழுவதும் சாலை போக்குவரத்து காவலர்கள், காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், போக்குவரத்து விதிகளை மீறிய 3,870 வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குறிப்பாக
குற்றம் | எத்தனை நபர் |
வாகனத்தில் மூன்று பேராக பயணம் | 126 |
ஹெல்மேட் இல்லாமல் பயணம் | 1,831 |
தவறான பாதையில் ஓட்டுதல் | 10 |
செல்போனில் பேசிக்கொண்ட வாகனம் ஓட்டுதல் | 48 |
அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் | 277 |
குடித்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் | 24 |
காரில் சீட்பெல்ட் அணியாதவர்கள் | 349 |
இதுகுறித்து அம்மாநில போக்குவரத்து அமைச்சர் பத்மநாப பெஹெரா (Padmanabha Behera) கூறுகையில், " இந்த திடீர் வாகன சோதனையில் சாலை போக்குவரத்து காவலர்கள் 1,785 பேரிடமிருந்து ரூ. 88 லட்சம் அபராதமாகவும், மாநில காவல் துறையினர் 2,112 பேரிடமிருந்து ரூ. 18 லட்சம் அபராதமாகவும் வசூலித்தனர். இதனால், ஒரே நாளில் 3,870 வாகன ஓட்டுநர்களிமிருந்து சுமார் 1 கோடியே 6 லட்சம் ரூபாய் அபராதமாக அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. வாகன சோதனையின் போது காவல் துறையினர், அபராதம் வசூலிக்கும்போது ஒழுங்காக நடந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தேனியில் கஞ்சா விற்ற இளைஞர் கைது