சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் இதுவரை 38 பேர் உயிரிழந்தும் ஆயிரத்து 90க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட வாரியர்ஸ் பணியின் போது உயிரிழந்தால் அவர்களின் சேவையைப் பாராட்டி அந்த குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மேலும், வாரியர்ஸ் தனியாரா அல்லது அரசு நிறுவனங்களைச் சார்ந்தவர்களா என்பது எல்லாம் பொருட்டில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற புனேயைச் சேர்ந்த 60 பேர் தனிமைப்படுத்தல்