ETV Bharat / bharat

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் தட்கல் ரயில் டிக்கெட் மோசடியில் கைது! - டிக்கெட் மோசடி வழக்கு ரயில்வே பாதுகாப்புப் படை

டெல்லி : சட்டவிரோத மென்பொருள் மூலம் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக வங்கதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முக்கிய நபர் உள்பட ஏழு பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

ticket fraud, டிக்கெட் மோசடி
ticket fraud
author img

By

Published : Feb 20, 2020, 9:38 AM IST

சட்டவிரோத மென்பொருள் மூலம் ரயில்வே டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்று வருவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான விசாரணையில், சிலரை கைதுசெய்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், தற்போது மேலும் ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் (டிஜி) அருண் குமார், "டிக்கெட் மோசடி தொடர்பான வழக்கில், சமீபத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போடார் என்பவருக்கு, வங்கதேச பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்-முஜாகிதீனுடன் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.

ஏஎன்எம்எஸ், மேக், ஜாகுவார் உள்பட பல்வேறு சட்டவிரோத மென்பொருள்கள் மூலம் ஐஆர்சிடிசி இணையதளத்தை ஹேக் செய்து, அதிலிருந்து தட்கல் டிக்கெட்டுகளை பெற்று கள்ளச்சந்தையில் விற்று வந்துள்ளனர். இந்த ஆப்களை வைத்து ஆண்டிற்கு ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை லாபம் பார்த்துள்ளனர்.

விசாரணையின்போது, முக்கிய குற்றவாளியான போடார், 'ஹெர்மெஸ் ஐ-டிக்கெட் லிமிடட்' என்ற நிறுவனத்தின் 'ஸ்மார்ட் ஷாப்' என்ற செல்போன் செயலி மூலம் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ராஜேஷ் யாதவ் என்பவருக்குச் சொந்தமான சிஃபா எண்டர்பிரைஸ், வைபை சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஹெர்மெஸ் நிறுவனம், ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

போடார், ராஜேஷ் யாதவ் ஆகியோரின் கைதைத் தொடர்ந்து, லக்னோவைச் சேர்ந்த ஷம்ஷீரையும் கைது செய்துள்ளோம். இந்த ஷம்ஷீர், டிக்கெட் மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட துபாயைச் சேர்ந்த ஹமீத் அஷ்ரஃப் என்பவருடன் சேர்ந்து பணிசெய்து வந்துள்ளார்.

இதையடுத்து, 'மேக்' மென்பொருளை உருவாக்கிய சத்தியவான் உபத்யாய், அகமதாபாத்தைச் சேர்ந்த டேனிஷா, சூரத்தைச் சேர்ந்த அமித் பிரஜபதி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, ரூ.2.59 கோடி மதிப்புள்ள 8 ஆயிரத்து 569 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளோம்.

ஐஆர்சிடிசி இணையத்தில் நிலவிவந்த பிரச்னைகளை நாங்கள் தீர்த்துவிட்டோம். இன்றைய நிலவரப்படி, சட்டவிரோத மென்பொருள்கள் ஏதும் செயல்படவில்லை. அவற்றை இயக்கிவந்த பெரும்பாலான ஆப்ரேட்டர்களை கைது செய்துவிட்டோம். இவர்களின் கைதால், தற்போது தட்கலில் டிக்கெட் புக் செய்யும்போது, பயணிகளுக்கு அதிகளவில் இருக்கைகள் தடையின்றி கிடைக்கும்” என்று கூறினார்.

ரயில்வே டிக்கெட் மோசடி வழக்குகளில், கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை 60 பேர் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பயங்கரவாதிகள் 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.