கர்நாடக மாநிலத்தில், மைசூர் அரண்மனைக்குப் புதிய ராஜாவாக யுதுவீர் கிருஷ்ணதத்தா சமராஜா வாடியார் இந்த ஆண்டு பதவியேற்றுக்கொண்டார். இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை என்னும் அஷ்ட்ரா பூஜையை அரச குடும்பத்தினர் விமரிசையாக கொண்டாடினர்.
இந்தப் பூஜையில் அரச குடும்பத்தினர் பயன்படுத்திய வாள்கள், துப்பாக்கிகள், போர் கருவிகளுக்கு பூஜை செய்து வணங்கப்பட்டது. அதேபோல் குதிரைகளும், யானைகளையும் கடவுளாக பாவித்து பூஜை செய்யப்பட்டது.
அதையடுத்து புவனேஷ்வரி கோயிலுக்கு அரச குடும்பத்தினர் ஊர்வலம் சென்றனர். மைசூர் தசரா கொண்டாட்ட பண்டிகைகளுக்கு புகழ்பெற்றிருக்கும் நிலையில், பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் உயிர்ப்போடு வைத்துள்ளதை இந்த வகையான கொண்டாட்டங்கள் காட்டுகின்றன.
இதையும் படிக்கலாமே: குலசை தசரா விழா: ஆர்ப்பரித்த பக்தர்களின் காளி ஊர்வலம்...!