புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் இப்பகுதியில் ரவுடி என்று கூறப்படுகிறது. பாண்டியன் மீது காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் இன்று மாலை பாண்டியன் அமர்ந்திருக்கும் போது, அவர் அருகில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.
இதில், நிலைதடுமாறிய பாண்டியன் அவர்களிடமிருந்து தப்பிக்க மதில் சுவர் மீது ஏறி தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் விடாமல் தொடர்ந்து பாண்டியனை துரத்தியது. பின்னர் அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களைக் கொண்டு அரிவாளால் பாண்டியனை கழுத்துப் பகுதியில் வெட்டிக் கொலை செய்தது. இதில் சம்பவ இடத்தில் துடிதுடித்து பாண்டியன் உயிரிழந்தார்.
கொலை செய்துவிட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானது. இதுகுறித்து தகவலறிந்த அரியாங்குப்பம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாண்டியன் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்பகை காரணமாக கொலை நடந்துள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் நடந்துள்ள இந்தக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படங்க: கொலையா? தற்கொலையா? கணவர் சாவில் மர்மம்!