ETV Bharat / bharat

கரோனா களப்பணியாளராக களமிறங்கிய 'கோலர்' ரோபோட் !

மும்பை: மகாராஷ்டிராவில் போடார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மேற்கொள்ள 'கோலர்' என அழைக்கப்படும் டிராலி ரோபோட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கோலர்
கோலர்
author img

By

Published : Jul 8, 2020, 3:22 PM IST

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வேகமாக பரவி வரும் வைரசை கட்டுப்படுத்தும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

அதேபோன்று வைரசை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களான மருத்துவர்கள், காவலர்கள் அதிகளவில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பாதிப்பாளர்களுக்கு மருந்துகள் வழங்குதல் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த அடிப்படை வசதிகளை மேற்கொள்ள செவிலியர்கள், மருத்துவர்களுக்குப் பதிலாக, கோலர் என்ற ரோபோக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் அலுவலகம் சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

கோலர்
கோலர்

அதில், "டிராலி ரோபோட் 'கோலர்' மும்பையில் உள்ள போடார் மருத்துவமனையில் பணியில் உள்ளது. இந்த ரோபோட் கரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்டவையை வழங்கி வருகிறது.

  • Robot ‘Gollar’ has reported on duty at Podar Hospital in Mumbai! It’ll get you food, water & medicines.

    This is an important step in our #WarAgainstVirus as it will eliminate contact and reduce risk for our medical staff in COVID Facilities. pic.twitter.com/BGKfyGlMdC

    — CMO Maharashtra (@CMOMaharashtra) July 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இம்முயற்சியானது, மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்று பரவாமல் பாதுகாக்கும் முதல் முயற்சியாகும்‌" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதே போன்று, பல்வேறு மாநிலங்கள் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தவிர்த்து, கரோனா வைரஸ் பாதிப்பாளர்களுக்கு மருந்து வழங்குதல் போன்ற அடிப்படை தேவைகளை வழங்கவும், கரோனா வைரஸ் களப்பணியாளர்களுக்கும் பரவாமல் தடுக்கும் விதமாக, மருத்துவமனைகளில் ரோபோட்களை நியமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.