பிரியங்கா காந்தியின் கணவரும், பிரபல தொழிலதிபருமான ராபர்ட் வதோரா, பண மோசடியில் ஈடுபட்டதாவும், சட்டவிரோதமாக இங்கிலாந்தில் சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆறாம் தேதி முதல்முறையாக ராபர்ட் வதோராவிடம் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சுமார் ஆறு மணிநேரம் வரை இந்த விசாரணை நீடித்தது.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்று அமலாக்கத்துறை அவரிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதுவரை ராபர்ட் வதோரா அமலாக்கத் துறையில் ஆஜராகி அதிக நேரம் விசாரணை செய்தது இதுவே அதிக நேரமாகும்.