ETV Bharat / bharat

கரோனாவால் முகக்கவசம் கட்டாயம்... காவலர்களுக்கு சவாலான ஏடிஎம் கொள்ளையர்கள்!

கொல்கத்தா: கரோனாவால் முகக்கவசம் கட்டாயம் என்பதால், ஏடிஎம் கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பது காவல் துறைக்குச் சவாலாக உள்ளதாக மூத்த அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

atm
atm
author img

By

Published : Jun 5, 2020, 4:23 PM IST

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முகக்கவசமின்றி சாலையில் சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இச்சமயத்தில்தான் முகமூடியை அணிந்தபடி ஏடிஎம்மில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களைப் பிடிப்பது சவாலாக உள்ளதாக காவல் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், "அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளதால் ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிப்பதில் குழப்பம் நிலவி வருகிறது. ஏடிஎம் பாதுகாப்பிற்கு காவலர் மட்டும் போதாது. முக்கியமாக, அலாரம் வசதியை மேம்படுத்த வேண்டும். ஏடிஎம்மில் கொள்ளை அடிக்கும் முயற்சி குறித்த தகவல்கள் உடனடியாக காவல் நிலையத்திற்குக் கிடைக்கும் வகையில் அலாரம் வடிவமைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

நகரின் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பதற்கான முறைகேடு முயற்சிகள் நடந்ததையடுத்து, கொல்கத்தா காவல்துறை சமீபத்தில் வங்கி அலுவலர்களின் ஆன்லைன் சந்திப்பை நடத்தியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் குறைந்திருந்த குற்றச் சம்பவங்கள், தற்போது தளர்வுகள் அறிவித்ததையடுத்து மீண்டும் அதிகரித்துள்ளன எனக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.