ETV Bharat / bharat

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு- மாரடைப்பால் மயங்கி விழுந்த எம்.எல்.ஏ

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பரப்புரை மேற்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

RJD MLA gets heart attack due to ticket cut

author img

By

Published : Oct 7, 2020, 8:45 AM IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 28ஆம் தேதிமுதல் தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சார்பாக களமிறங்கிய அன்வர் ஆலம் வெற்றிபெற்றார்.

தனக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உறுதியாக வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்துவந்த அன்வர் ஆலம் தொடர்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அன்வர் ஆலமிற்குப் பதிலாக கமாருதீன் அன்சாரி என்பவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், மன வருத்தத்தில் இருந்துவந்த அன்வர் ஆலம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதனையடுத்து அவர், பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: பிகார் தேர்தல் : பாட்னா சென்ற தலைமைத் தேர்தல் ஆணையர் குழு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.