பிகார் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 என மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிடுகிறது.
லாலு பிரசாத் யாதவ் சிறையில் உள்ளதால், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இத்தேர்தலை சந்திக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சிகளுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இன்று அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
- மாநிலத்தில் 17 விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
- 10 லட்சம் அரசு வேலைகளை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
- 'சம வேலை சமமான ஊதியம்'
- அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் தக்க வைத்துக் கொள்ளப்படுவார்கள்
- அனைத்து துறைகளும் தனியார்மயமாக்கப்படுவது நிறுத்தப்படும்
- சோலர் மூலம் இயங்கும் பம்புகளை வழங்குதல்
- பிகாரில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
- ஒவ்வொரு மண்டலத்திலும் பெரிய ஸ்டேடியம் கட்டப்படும்
- அரசு ஊழியர்களுக்கு முந்தைய ஓய்வூதிய முறையே பின்பற்றப்படும்
- நெல் தொழில் வணிகமயமாக்கப்படும்
- சிறப்பு தொழில் மண்டலங்கள் உருவாக்கப்படும்
- மின்சார கட்டணம் ரத்து செய்யப்படும்
- விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும்
தேர்தல் நடைபெற இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை, பிகார் தேர்தல் களத்தின பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரவல்: அடுத்த 3 மாதங்கள் மிக முக்கியமானது - ஹர்ஷ் வர்தன்