ETV Bharat / bharat

ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்த எடியூரப்பா! - சிரா, ஆர்.ஆர்.நகர் சட்டப்பேரவை

பெங்களூரு : கர்நாடக மாநிலம் சிரா, ஆர்.ஆர்.நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதன் மூலம், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தன் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த எடியூரப்பா!

author img

By

Published : Nov 11, 2020, 5:34 PM IST

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தனது மகன் பி.ஒய்.விஜயேந்திராவிற்கான பிரகாசமான அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்ததோடு, கட்சியின் மாநிலத் தலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பிய ஒரு சில கட்சித் தலைவர்களுக்கும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தக்க பதில் அளித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு மீது காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதத்தின்போது சட்டப்பேரவையில் பேசிய எடியூரப்பா, ​”​இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் வென்று, மக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுடன்தான் மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி நடத்துகிறது என்பதை நிரூபித்துக் காட்டுவேன்” என்று சவால் விடுத்திருந்தார்.

ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த 16 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவரான முனிரத்னாவிடம் அவர் அளித்த வாக்குறுதியின்படி, இடைத்தேர்தலில் அவரை எடியூரப்பா வெற்றி பெற செய்துள்ளார்.

மேலும், இடைத்தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டத்தின்போது ”ஆர்.ஆர்.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் முனிரத்னா வெற்றிபெற்றால் அவரை அமைச்சர் ஆக்குவேன்” எனக்கூறி எடியூரப்பா பரப்புரை மேற்கொண்டார். இதனை சாத்தியமாக்க வாக்காளர்கள் முனிரத்னாவிற்கு வாக்களித்து வெற்றிப்பெற செய்யவேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார்.

சிராவில் வரலாறு படைத்த பாஜக:

சிரா சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவு, அம்மாநில பாஜகவின் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் வலதுசாரிக் கட்சிகள் அந்தத் தொகுதிகளில் இதுவரை வென்றதில்லை. இதனுடன், பாஜக இந்தத் தொகுதியில் டெபாசிட்கூட வாங்காது என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்த முறை சிராவில் புதிய அரசியல் அத்தியாயத்தை இந்த வெற்றியின் மூலம் பாஜக தொடங்கியுள்ளது.

சிரா, ஆர்.ஆர்.நகர் இடைத்தேர்தல் வெற்றிகள், கர்நாடகாவில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாஜக மாநில அரசாங்கத்தின் செல்வாக்கிற்கு சான்றாக அமைந்துள்ளன.

கரோனா அச்சுறுத்தல், பொருளாதார நெருக்கடிக்கு இடையே, பாஜகவிற்கு கிடைத்த இந்த வெற்றி முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

மகனின் அரசியல் எதிர்காலத்திற்கு பலம் சேர்த்த வெற்றி:

கர்நாடக இடைத்தேர்தலில் வெற்றிபெற மூத்த தலைவர்களை கொண்ட ஒரு குழுவை எடியூரப்பாவின் மகன், பி.ஒய்.விஜயேந்திரா தலைமையில் பாஜக அமைத்தது. விஜயேந்திரா, சிராவில் தங்கி தொகுதியின் எல்லா இடங்களிலும் பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில், தற்போது பாஜகவின் மாநிலப் பிரிவு துணைத் தலைவராக இருக்கும் பி.ஒய்.விஜயேந்திரா கட்சிக்குள் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஒரு சில தலைவர்கள், விஜயேந்திரா, நிர்வாக விஷயத்தில் தலையிடுகிறார் என்றும் குற்றம் சாட்டினர். ஆனால் இப்போது அவர் சிராவில் கட்சியின் வெற்றியை உறுதி செய்ததன் மூலம் தன் மீது விமர்சனம் வைத்தவர்களுக்கு பதிலடி தந்துள்ளார்.

இனி எடியூரப்பா மீது உயர்மட்ட தலையீடு இருக்காது:

இடைத்தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்று கட்சியின் வலுவான செயல்திறனைத்வெளிபடுத்தியுள்ளது. இனி மாநிலக் கட்சியின் தலைமையில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவதற்கான செயல்களில் பாஜக உயர்மட்டக் குழு தலையிட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.