அஸ்ஸாம் மாநிலத்தில் காஞ்சஞ்சூரி பகுதியில் காசிரங்கா தேசிய வனப்பூங்கா உள்ளது. இங்கு காப்ராய் வேட்டையாடுதல் தடுப்பு முகாமைச் சேர்ந்த வன அலுவலர்கள் நேற்று (ஆகஸ்ட் 8) வனப்பூங்காவின் மெட்டேகா பீல் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தனர்.
அப்போது, காண்டாமிருகம் ஒன்று துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்தது. அதன் கொம்புகள் வெட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. வேட்டைக்காரர்களின் வேலையாக தான் இருக்கும் என சந்தேகித்த அலுவலர்கள் விசாரணையைத் தொடங்கினர். இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரில், பிடித்து பிஸ்வநாத் வனவிலங்கு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.