ETV Bharat / bharat

'துப்புரவுப் பணியாளர்களுக்கு ஆர்டிபிசிஆர் மருத்துவ பரிசோதனை'

author img

By

Published : May 7, 2020, 11:39 PM IST

புதுச்சேரி: துப்புரவுப்பணியாளர்கள், காவல் துறையினருக்கு ஆர்டிபிசிஆர் மருத்துவ பரிசோதனை நடத்தவுள்ளதாக புதுச்சேரி வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான்
துப்புரவுப்பணியாளர்களுக்கு ஆர்டிபிசிஆர் மருத்துவ பரிசோதனை சோதனை

புதுச்சேரி கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண், நகராட்சி, பஞ்சாயத்து அதிகாரிகள், காவல் துறையினர், துணை தாசில்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான், "பொதுமக்களிடம் கரோனா நோய் குறித்த அச்சம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதனால் தகுந்ந இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக் கவசங்களை அணிவதில் மக்கள் அக்கறை செலுத்தவில்லை.

புதுச்சேரி துப்புரவுப் பணியாளர்கள், காவல் துறையினர், கிராமப்புற மக்களுக்கு கரோனா நோய் கண்டறியும் ஆர்டிபிசிஆர் மருத்துவ பரிசோதனையை நடத்த உள்ளோம். புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளிலும் மூன்றாவது முறையாக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கப்படவுள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து திரும்பும் வாகன ஓட்டுநர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே, புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: பயங்கரவாதியைக் கொன்ற பாதுகாப்புப் படையினருக்குக் காங்கிரஸ் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.