பெங்களுரு ராஜராஜேஸ்வரி நகரில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி, பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் அவரது வீட்டு வாசலில் அடையாளம் தெரியாக நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையில் நீண்ட நாள்களாக தேடப்பட்டுவந்த ருஷிகேஷ் தேவ்திகர் என்பரை சிறப்பு புலனாய்வு பிரிவுனர் ஜார்கண்டிலுள்ள தான்பாத் (Dhanbad) என்ற இடத்தில் அதிரடியாக கைது செய்யதனர்.
அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், வலதுசாரி சிந்தனையாளர் ஒருவரை கொல்ல திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட அமோல் கோஃலே கவுரி லங்கேஷ் ஆகியோரை கொல்ல திட்டம் தீட்டிய இவர்கள், அதற்காக இவ்விருவர்களின் அன்றாட நடவடிக்கையை கூர்ந்து கண்காணித்ததாகவும் செப்டம்பர் 5ஆம் தேதி கவுரி லங்கேஷை கொலை செய்ததும் தெரியவந்தது.
மேலும், கொலை செய்ய திட்டமிடும்போது, காவல்துறையினிடம் சிக்காமல் தகவல்களை பரிமாறிக்கொள்ள அவர்கள் பயன்படுத்தும் code word எனப்படும் சங்கேத சொற்களும், அதற்கான அர்தங்களும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறியீட்டுச் சொற்களும் அதற்கான அர்தங்களும்
Target: மத விரோதி
Practice: கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ள நபரின் தினசரி நடவடிக்கைகளை கூர்ந்து கண்காணிக்கவும்
Bulb practice: சிசிடிவி கேமரா குறித்த தகவல்களை சேகரி
Tuition: கூட்டாளிகளுக்கு ஆயதங்களை பயன்படுத்த பயிற்சி அளிக்கவும்
Event/kruti Action: மத விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர்களின் மீது வன்முறையான தாக்குதல் நடத்து
2.5. Event: மத விரோதிகள் மீது கொடூர தாக்குதல் நடத்து, பெட்ரோல் குண்டு வீசி அவர்களை எச்சரி
3.0 Event: மத விரோதியை கொல்லவும்
Literature( sahitya): துப்பாக்கி
Laddu: நாட்டு வெடிகுண்டு
இதையும் படிங்க: பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது!