ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் கட்டுப்பாடுகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு வழக்கறிஞர் துஷார் மேக்தா, தினசரி அடிப்படையில் கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் 99 சதவீத பகுதிகளில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். அப்போது நீதிபதி, தொலைதொடர்பு, இணையதளம் குறித்து கேள்வி எழுப்பினார்.
எல்லை பிரச்னை காரணமாக இந்த கட்டுப்பாடுகள் இருப்பதாக துஷார் மேக்தா தெரிவித்தார். இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து அவ்வப்போது மறுபரீசிலனை செய்வது அவசியம் என்று கூறிய நீதிபதி, வழக்கை வருகிற 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் காவலர்களுக்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு